பூச்சி மருந்து குடித்து பெண் தற்கொலை
விழுப்புரம்: ஆயந்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி கிருஷ்ணவேணி, 47; இவர், நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள நிலத்தில் 2 ஆடுகளை மேய்த்த போது, ஆடுகளைக் காணவில்லை.
வாலிபரைத் தாக்கியவர் கைது
விழுப்புரம்: வி.மருதுார், பெருமாள் நகரைச் சேர்ந்தவர் திருஞானம் மகன் கணபதி, 22; ரவுடி. அதே பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார் மகன் கார்த்தி, 28; இருவரும் நேற்று முன்தினம் ஜானகிபுரம் பகுதியில் மது அருந்தினர் அப்போது அவர்களுக்கள் ஏற்பட்ட தகராறில் கார்த்தி ஆத்திரமடைந்து, கணபதியை தாக்கினார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து கார்த்தியை கைது செய்தனர்.
அடையாளம் தெரியாத 2 பேர் சாவு
விழுப்புரம்: வளவனுார் அடுத்த மோட்சக்குளம் கிராமத்தில் உள்ள நிலத்தில் நேற்று காலை 8:00 மணிக்கு 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இறந்து கிடந்தார். வளவனுார் போலீசார், உடலைக் கைப்பற்றி இறந்தவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
குடும்பத் தகராறு: கணவர் தற்கொலை
விழுப்புரம்: வளவனுார் அடுத்த பனங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ், 36; திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. மீன் லாரி ஓட்டி வந்தார். இவர், திருமணமானதில் இருந்து பனங்குப்பத்தில் உள்ள தனது மாமனார் வீட்டில் வசித்து வந்தார். கணவன், மனைவிக்குமிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனமுடைந்த சுந்தர்ராஜ், நேற்று வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
மா.கம்யூ., நிர்வாகி மீது வழக்கு
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி. மா.கம்யூ., வட்ட செயலாளர். மற்றும் மணிகண்டன், 55; இருவரும் கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் ஆதார் சேவை மையத்தில் பணிபுரிந்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான பாலச்சந்தர், 36; என்பவர் மீது பல புகார்களைத் தெரிவித்து உள்ளூர் மற்றும் கட்சி வாட்ஸ் ஆப் குழுக்களில் பதிவிட்டுள்ளனர்.
கஞ்சா வைத்திருந்தவர் கைது
திருக்கோவிலுார்: மணலுார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர்கள் திருமால், துர்காதேவி மற்றும் போலீசார் காவல் நிலையம் முன் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.