/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விளையாட்டு துறையில் சாதனை பத்ம விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு விளையாட்டு துறையில் சாதனை பத்ம விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
விளையாட்டு துறையில் சாதனை பத்ம விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
விளையாட்டு துறையில் சாதனை பத்ம விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
விளையாட்டு துறையில் சாதனை பத்ம விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஜூன் 27, 2024 11:46 PM
விழுப்புரம்: விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு பத்ம விருது வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் பல்வேறு துறைகளில் தலை சிறந்து விளங்குபவர்களுக்கும், சாதனை புரிந்தவர்களுக்கும் பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. இவ்விருதுக்கு கலை, விளையாட்டு, சமூகப்பணி, பொது சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, அரசு குடிமைப் பணி, விளையாட்டு மற்றும் இதர துறைகளில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்தவர்கள் தகுதியுடையவர் ஆவர்.
பத்ம விருதுகளான பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகள் இந்திய அரசால் வரும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று வழங்கப்பட உள்ளது.
எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் விளையாட்டுத் துறையில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்தவர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் மற்றும் பிற விபரங்கள் பெற awards.gov.in மற்றும் padmaawards.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். விருது தொடர்பான இதர விபரங்களை, மாவட்ட விளையாட்டு அலுவலக முகவரியில் நேரில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.