/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ போதை பொருள்கள் விற்பனையை தடுக்க கிராம அளவில் குழு அமைத்து கண்காணிப்பு கலெக்டர் பழனி தகவல் போதை பொருள்கள் விற்பனையை தடுக்க கிராம அளவில் குழு அமைத்து கண்காணிப்பு கலெக்டர் பழனி தகவல்
போதை பொருள்கள் விற்பனையை தடுக்க கிராம அளவில் குழு அமைத்து கண்காணிப்பு கலெக்டர் பழனி தகவல்
போதை பொருள்கள் விற்பனையை தடுக்க கிராம அளவில் குழு அமைத்து கண்காணிப்பு கலெக்டர் பழனி தகவல்
போதை பொருள்கள் விற்பனையை தடுக்க கிராம அளவில் குழு அமைத்து கண்காணிப்பு கலெக்டர் பழனி தகவல்
ADDED : ஜூன் 27, 2024 11:46 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் மது, போதைப் பொருள் விற்பனையைத் தடுக்கவும், தகவல் தெரிவிக்கவும் கோட்ட, கிராம அளவில் குழுக்கள் உருவாக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில், கள்ளச்சாராயம், போதைப் பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுப்பது தொடர்பாக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம், கடந்தாண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் கடந்த 25ம் தேதி வரை மாவட்டத்தில் 10 ஆயிரத்து 468 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 10 ஆயிரத்து 236 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2023ம் ஆண்டில் 35 பேர் மீதும், 2024ம் ஆண்டில் 4 பேர் மீது என மொத்தம் 39 பேர் மீது தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விற்பனையைத் தடுக்கவும், கிராம அளவில் தகவல் தெரிவிக்கவும், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலாளர், சுய உதவிக்குழு உறுப்பினர், கிராம செவிலியர் மற்றும் அங்கன்வாடி பணியாளர் ஆகியோர் கொண்ட குழுக்கள், கோட்ட அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள், கிராமங்களில் கண்காணித்து, அவர்கள் மூலம் தகவல் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கள்ளச்சாராயம், போதைப்பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பயன்பாட்டை தடை செய்ய பொதுமக்கள் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். சென்னை மத்திய புலனாய்வு பிரிவுக்கு 10581 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும் 9498410581 என்ற வாட்ஸ ஆப் எண்ணிலும், கலெக்டர் அலுவலக கலால் பிரிவுக்கும் 04146-225431 என்ற தொலைபேசி எண்ணிலும், பொது மக்கள் தங்களது புகார்களைத் தெரிவிக்கலாம்.
புகார் தெரிவிப்பவர்கள் குறித்த விபரம் ரகசியமாக காக்கப்படும். எனவே, பொதுமக்கள் கள்ளச்சாராயம், போதைப்பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் ஆகியவற்றின் பயன்பாட்டை முற்றிலுமாக தடுக்க முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.