/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மருந்து தட்டுப்பாட்டை கண்டித்து ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை மருந்து தட்டுப்பாட்டை கண்டித்து ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை
மருந்து தட்டுப்பாட்டை கண்டித்து ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை
மருந்து தட்டுப்பாட்டை கண்டித்து ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை
மருந்து தட்டுப்பாட்டை கண்டித்து ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை
ADDED : ஜூன் 27, 2024 11:44 PM

மரக்காணம்: அனுமந்தை ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருந்து, மாத்திரைகள் இல்லாததை கண்டித்து பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மரக்காணம் அடுத்த அனுமந்தையில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு பணியில் உள்ள டாக்டர், அதே பகுதியில் தனியாக கிளினிக் வைத்துள்ளார்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு வரும் பலரை அவரது கிளினிக்கில் உள்ள ஆய்வகத்தில் சர்க்கரை, ரத்த அழுத்தம் மற்றும் ரத்த பரிசோதனை செய்ய அனுப்புகிறார்.
மேலும், மருந்து மாத்திரைகளை தனியார் மருந்து கடையில் வாங்கிக் கொள்ளும்படி அறிவுறுத்துகிறார் என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் அனுமந்தை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இரவு நேரத்தில் ஒரு டாக்டரை நியமிக்க வேண்டும். போதிய மருந்து மாத்திரைகளை உடனடியாக வழங்க மாவட்ட மருத்துவ நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் நேற்று முற்பகல் 11:30 மணியளவில் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதைத் தொடர்ந்து 12:30 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர்.