ADDED : ஜூலை 25, 2024 11:29 PM
திண்டிவனம்: திண்டிவனம் அருகே நாய் கடித்ததால், புள்ளி மான் இறந்தது.
ஒலக்கூர் பகுதியையொட்டியுள்ள பட்டா நிலத்தில், நேற்று காலை புள்ளி மான் நாய் கடித்து காயமடைந்து கிடப்பதாக ஒலக்கூர் போலீசார் மற்றும் வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மானை மீட்டு, திண்டிவனம் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மான் இறந்தது.
தொடர்ந்து கால்நடை மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை செய்து புதைக்கப்பட்டது.