/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ நிலம், மனை, முகவர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நிலம், மனை, முகவர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம்
நிலம், மனை, முகவர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம்
நிலம், மனை, முகவர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம்
நிலம், மனை, முகவர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம்
ADDED : ஜூலை 25, 2024 11:29 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில் நிலம், மனை, முகவர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
சங்கத் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். செயலாளர் மோகன்ராஜ் வரவேற்றார். பொருளாளர் புருஷோத்தமன், இணைச் செயலாளர்கள் ராஜேந்திரன், முருகன், ரவிச்சந்திரன், சண்முக சந்திரேசன், துணைச் செயலாளர் அஞ்சாபுலி முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், விழுப்புரத்தில் உள்ள நிலம், மனை, முகவர்கள் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும், சங்கம் சார்பில் இலவச மருத்துவ காப்பீடு செய்து தருவது.
ஆண்டுக்கு ஒருமுறை இலவச மருத்துவ முகாம் நடத்தப்படும்.
விழுப்புரம் சாலாமேடு பகுதியில் நத்தம் நிலத்திற்கும், வீட்டு மனைகளுக்கும், 10 மாதங்களாகியும், பட்டா வழங்காமல் இருப்பதால், மாவட்ட நிர்வாகம் அதனை விரைந்து வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.