/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வானுார் வட்டத்தில் அரசின் வளர்ச்சிப்பணிகள் அரசு முதன்மை செயலாளர் நேரில் ஆய்வு வானுார் வட்டத்தில் அரசின் வளர்ச்சிப்பணிகள் அரசு முதன்மை செயலாளர் நேரில் ஆய்வு
வானுார் வட்டத்தில் அரசின் வளர்ச்சிப்பணிகள் அரசு முதன்மை செயலாளர் நேரில் ஆய்வு
வானுார் வட்டத்தில் அரசின் வளர்ச்சிப்பணிகள் அரசு முதன்மை செயலாளர் நேரில் ஆய்வு
வானுார் வட்டத்தில் அரசின் வளர்ச்சிப்பணிகள் அரசு முதன்மை செயலாளர் நேரில் ஆய்வு
ADDED : ஜூலை 25, 2024 06:26 AM

வானுார்: வானுார் வட்டத்தில், தமிழக முதல்வரின் உங்களைத்தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ், திட்டப்பணிகளை அரசு முதன்மைச் செயலாளர் ஹர் சஹாய் மீனா ஆய்வு செய்தார்.
தென்கோடிப்பாக்கம் ஊராட்சியில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், ரூ.6.99 கோடி மதிப்பீட்டில் தென்கோடிப்பாக்கம் -கொந்தாமூர் இடையே நரசிம்மா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்டப்பாலத்தை ஆய்வு செய்தார்.
கொடூரில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில், முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்தின்கீழ், ரூ.74.81 லட்சம் மதிப்பீட்டில் நடக்கும் சாலை மேம்படுத்தும் பணி, வில்வநத்தத்தில் ஒன்றிய துவக்கப்பள்ளியில், முதல்வரின் காலை உணவு திட்டத்தின்கீழ், காலை உணவு தயாரிக்கும் சமையற்கூடத்தில் உணவு தயாரிப்பதை பார்வையிட்டதுடன், உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
புளிச்சப்பள்ளத்தில் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில், 11ம் வகுப்பு பயிலும் 54 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
மேலும், இப்பள்ளியில், ரூ.2.32 கோடி மதிப்பீட்டில் 8 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வுக்கூட கட்டடம் கட்டும் பணியையும் அவர் ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, இரும்பை ஊராட்சியில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ், நீண்ட காலமாக தரிசாக உள்ள நிலங்களில் கொய்யா சாகுபடி செய்யப்பட்டுள்ளதை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்ஷு நிகம், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வளர்மதி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் ராஜேந்திரன், தாசில்தார் நாராயணமூர்த்தி, வானூர் பி.டி.ஓ.,க்கள் கார்த்திகேயன், தேவதாஸ், ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.