/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பணி ஓய்வு பெற்ற செவிலியருக்கு பாராட்டு விழா பணி ஓய்வு பெற்ற செவிலியருக்கு பாராட்டு விழா
பணி ஓய்வு பெற்ற செவிலியருக்கு பாராட்டு விழா
பணி ஓய்வு பெற்ற செவிலியருக்கு பாராட்டு விழா
பணி ஓய்வு பெற்ற செவிலியருக்கு பாராட்டு விழா
ADDED : ஜூன் 02, 2024 05:22 AM

திண்டிவனம்: திண்டிவனம் தலைமை அரசு மருத்துவமனை செவிலியருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடந்தது.
திண்டிவனம் தலைமை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் தமிழ்ச்செல்வி. இவருக்கு நேற்று பணி ஓய்வு பாராட்டு விழா நடந்தது.
விழாவிற்கு, மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் லட்சுமணன், டாக்டர்கள் ரவிச்சந்திரன், முரளிஸ்ரீ, பாரதி மற்றும் செவிலியர்கள், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா, முன்னாள் எம்.பி., தன்ராஜ், பி.ஆர்.எஸ்.துணிக்கடை உரிமையாளர் ரங்கமன்னார் மற்றும் அரசு மருத்துவமனை ஊழியர்கள் பங்கேற்றனர்.