/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அரசு ஆதிதிராவிடர் பள்ளியில் கூடுதல் கட்டுமான பணி: கலெக்டர் ஆய்வு அரசு ஆதிதிராவிடர் பள்ளியில் கூடுதல் கட்டுமான பணி: கலெக்டர் ஆய்வு
அரசு ஆதிதிராவிடர் பள்ளியில் கூடுதல் கட்டுமான பணி: கலெக்டர் ஆய்வு
அரசு ஆதிதிராவிடர் பள்ளியில் கூடுதல் கட்டுமான பணி: கலெக்டர் ஆய்வு
அரசு ஆதிதிராவிடர் பள்ளியில் கூடுதல் கட்டுமான பணி: கலெக்டர் ஆய்வு
ADDED : ஜூன் 02, 2024 05:21 AM

வானுார்: புளிச்சப்பள்ளம் அம்பேத்கர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் மற்றும் அறிவியல் ஆய்வக கட்டுமானப் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
இப்பள்ளியில், நபார்டு நிதியுதவி திட்டத்தின் கீழ், தாட்கோ சார்பில் 2.32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் அறிவியல் ஆய்வகங்கள் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை நேற்று கலெக்டர் பழனி ஆய்வு செய்தார்.
அப்போது, கட்டுமான பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, இப்பள்ளியில் அரசு பொதுத்தேர்வில் கிடைத்த தேர்ச்சி சதவீதம், நடப்பு கல்வியாண்டிற்கான மாணவ, மாணவியர்கள் சேர்க்கை விபரம் குறித்து கேட்டறிந்து சிறப்பு பயிற்சி வகுப்பை பார்வையிட்டார்.
மேலும், பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால் பள்ளி வளாகம், வகுப்பறை, கழிவறை உள்ளிட்டவற்றை சுகாதாரமான முறையில் வைத்திட தலைமையாசிரியருக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, தாசில்தார் நாராயணமூர்த்தி, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் வளர்மதி, தாட்கோ செயற்பொறியாளர் அன்பு சாந்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயக்குமாரி, உதவி கல்வி அலுவலர் கலிவரதன், புளிச்சப்பள்ளம் ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர் உட்பட பலர் உடனிருந்தனர்.