/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ நாட்டு கோழி வளர்ப்பு விண்ணப்பம் வரவேற்பு நாட்டு கோழி வளர்ப்பு விண்ணப்பம் வரவேற்பு
நாட்டு கோழி வளர்ப்பு விண்ணப்பம் வரவேற்பு
நாட்டு கோழி வளர்ப்பு விண்ணப்பம் வரவேற்பு
நாட்டு கோழி வளர்ப்பு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஜூன் 20, 2025 11:37 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நாட்டு கோழி வளர்ப்பு திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ள பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்திற்கு 10 கோழிப்பண்ணை செயல்படுத்த அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. 10 பயனாளிகளை தேர்வு செய்து, கலெக்டரிடம் ஒப்புதல் பெற்று முன்னுரிமை அடிப்படையில் சென்னை, கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் இயக்குநர் பயனாளிகள் தேர்வாவர்.
இந்த பண்ணை நிறுவ தேவையான கோழி கொட்டகை, கட்டுமானம், உபகரண செலவு, நான்கு மாத தீவன செலவுகளில் 50 சதவீதம் மானியமாக ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 625 ரூபாய் மாநில அரசு வழங்குகிறது.
பயனாளிக்கு 250 நாட்டு கோழி குஞ்சுகள் வழங்கப்படும். கொட்டகை அமைக்க 625 சதுரடி நிலம், தேர்வாகும் பயனாளி 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தவராக இருக்க வேண்டும்.
பயனாளிகளிடம் இருந்து ஆதார் நகல், பண்ணை அமையவுள்ள இடத்திற்கான சிட்டா, அடங்கல் நகல், 50 சதவீதம் தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள், 3 ஆண்டு பண்ணை பராமரிப்பு உறுதிமொழி, இதில் பயன்பெறாததற்கான சான்று பெற வேண்டும்.
சேர விரும்புவோர், அரசு கால்நடை மருத்துவமனையை அணுகி பூர்த்தி செய்ததை ஆவணங்களோடு அங்கேயே வரும் 25ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.