/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கொடி கம்பங்கள் அகற்றும் போது கடை தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு கொடி கம்பங்கள் அகற்றும் போது கடை தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
கொடி கம்பங்கள் அகற்றும் போது கடை தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
கொடி கம்பங்கள் அகற்றும் போது கடை தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
கொடி கம்பங்கள் அகற்றும் போது கடை தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
ADDED : ஜூன் 20, 2025 11:38 PM

வானூர் : வானுாரில் கட்சி கொடி கம்பங்களை அகற்றும் போது, ஜே.சி.பி., இயந்திரம் மின் கம்பியில் உரசி தீப்பொறி ஏற்பட்டு குப்பை மற்றும் கடை தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் நெடுஞ்சாலையோரம், பல்வேறு அரசியல் கட்சி, ஜாதி சங்கங்கள் என ஆங்காங்கே கொடி கம்பங்கள் அமைத்திருந்தனர்.
இது, போக்குவரத்துக்கு இடையூறாக, சாலைகளை மறித்து அமைக்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, சாலையோர கொடி கம்பங்களை அப்புறப்படுத்த உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி, விழுப்புரம் கோட்டப்பொறியாளர் உத்தண்டி உத்தரவின் பேரில், உதவி பொறியாளர் கிருஷ்ணன் தலைமையில், நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள், நேற்று திருச்சிற்றம்பலம் கூட்ரோடு மயிலம் ரோடு சந்திப்பில் உள்ள கட்சி கொடி கம்பங்களை ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர்.
அப்போது, திடீரென உயர் மின்னழுத்த கம்பியில், ஜே.சி.பி., இயந்திரம் உரசி மின்பொறி ஏற்பட்டு, அப்பகுதியில் உள்ள குப்பையில் விழுந்து தீப்பிடித்து எரிய துவங்கியது. காற்று வேகமாக வீசியதால், பக்கத்தில் இருந்த ஸ்கூல் பேக் தைக்கும் கடைக்கும் தீ பரவியது.
அதற்குள் அங்கிருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர்.
இதற்கிடையே மின்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மின்சாரம் உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.