Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ குரூப் 2 தேர்வர்களுக்கு கலெக்டர் அறிவுரை

குரூப் 2 தேர்வர்களுக்கு கலெக்டர் அறிவுரை

குரூப் 2 தேர்வர்களுக்கு கலெக்டர் அறிவுரை

குரூப் 2 தேர்வர்களுக்கு கலெக்டர் அறிவுரை

ADDED : செப் 25, 2025 11:34 PM


Google News
விழுப்புரம்:குரூப் 2 தேர்வர்கள், தேர்வு மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுரை வழங்கி உள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு;

மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம் மற்றும் செஞ்சி ஆகிய தாலுகாக்களை தலைமையிடமாக கொண்டு தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் வரும் 28ம் தேதி காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு (குரூப் 2 மற்றும் 2ஏ) பணிகள் கொள்குறி வகை தேர்வு நடக்கிறது.

மாவட்டத்தை சேர்ந்த 14,814 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். விண்ணப்பதாரர்கள், காலை 8:30 மணிக்கு தேர்வுக்கூடத்திற்கு அனுமதிச்சீட்டுடன் வருகைப்புரிய வேண்டும். 9:00 மணிக்கு மேல் தேர்வு கூடத்திற்கு வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும், தேர்வர்கள் 12:30 மணிக்கு முன் தேர்வு அறையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள்.

தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுடன் தேர்வு நடக்கும் இடத்திற்கு வருகைபுரிய வேண்டும். தவறினால் தேர்வர்கள் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள்.

கருப்பு பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஆதார் அட்டை, கடவுச்சீட்டு, டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையின் அசல் அல்லது ஒளி நகலை கொண்டு வர வேண்டும்.

தேர்வு கூடத்திற்கு உள்ளே மொபைல் போன் மற்றும் மின்னணு வாட்ச், புளுடூத் போன்ற மின்னணு சாதனங்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை. தேர்வர்கள் எளிய அனலாக் கைகடிகாரங்களை பயன்படுத்தலாம்.

தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக அரசு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பஸ் வசதிகள் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திலிருந்து அனைத்து தேர்வு மையங்களுக்கும் தேர்வு நாளன்று காலை 6:00 மணி முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் தேர்வர்கள் இந்த முக்கிய அறிவுரைகளை பின்பற்றி தேர்வில் வெற்றி பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us