/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பவ்டா தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் பவ்டா தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்
பவ்டா தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்
பவ்டா தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்
பவ்டா தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்
ADDED : செப் 25, 2025 11:35 PM

விழுப்புரம்: விழுப்புரம் பவ்டா தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
பவ்டா மேலாண் இயக்குனர் ஜாஸ்லின் தம்பி தலைமை தாங்கினார். இதில், வரும் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று விழுப்புரம் லோகலட்சுமி மண்டபத்தில் நடக்கும் விழுப்புரம், கடலுார் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 80 வயதான மூத்த குடிமக்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி குறித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது, முதன்மை கண்கணிப்பு அலுவலர் மாடசாமி, பவ்டா கல்வி குழுமங்களின் ஒருங்கிணைப்பாளர் டேவிட் ஆனந்த், இயக்குனர் பழனி, பவ்டா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துணை முதல்வர் சேகர், விளையாட்டு அலுவலர் மோகனசுந்தரம், ரோஸ்மலர் பொது மேலாளர் மனோகர், உதவி பொது மேலாளர் சிவராஜ், கோவிந்தராஜ், சிவராஜ், துணை பொது மேலாளர் ஆரோக்கியசாமி கலந்து கொண்டனர்.