/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தி.மு.க., மத்திய மாவட்ட மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம் தி.மு.க., மத்திய மாவட்ட மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம்
தி.மு.க., மத்திய மாவட்ட மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம்
தி.மு.க., மத்திய மாவட்ட மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம்
தி.மு.க., மத்திய மாவட்ட மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம்
ADDED : மே 29, 2025 12:09 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் தி.மு.க., மத்திய மாவட்ட மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம் நாளை (30ம் தேதி) நடக்கிறது.
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை;
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., மண்டல பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம் நாளை (30ம் தேதி) மதியம் 2.00 மணிக்கு, வானுார் சட்டசபை தொகுதிக்கும், மாலை 3.00 மணிக்கு விழுப்புரம் சட்டசபை தொகுதிக்கும், விழுப்புரம் கலைஞர் அறிவாலய தளபதி அரங்கில் நடைபெற உள்ளது.
மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் மண்டல பொறுப்பாளரான வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் கலந்துகொண்டு, நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.
விழுப்புரம் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் சரவணன், மாநில பொறியாளர் அணி செயலாளரான வானுார் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் கருணாநிதி முன்னிலை வகிக்கின்றனர்.
இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு மற்றும் பொது குழு உறுப்பினர்கள், நகர ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.