/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கரும்பில் நுண்ணுாட்ட சத்துக்கள் பயன்படுத்த ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை ஆலோசனை கரும்பில் நுண்ணுாட்ட சத்துக்கள் பயன்படுத்த ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை ஆலோசனை
கரும்பில் நுண்ணுாட்ட சத்துக்கள் பயன்படுத்த ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை ஆலோசனை
கரும்பில் நுண்ணுாட்ட சத்துக்கள் பயன்படுத்த ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை ஆலோசனை
கரும்பில் நுண்ணுாட்ட சத்துக்கள் பயன்படுத்த ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை ஆலோசனை
ADDED : மே 29, 2025 12:09 AM
செஞ்சி: கரும்பு விவசாயிகள் நுண்ணூட்ட சத்துள்ள உரத்தினை பயன்படுத்த ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை நிர்வாகம் ஆலோசனை வழங்கி உள்ளது.
செஞ்சி அடுத்த செம்மேடு ராஜ்ஸ்ரீ சர்க்கரைஆலை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
மாவட்டத்தில் கோடை மழை பெய்து வருவதால், கரும்பு அறுவடை முடிந்த வயல்களில் தற்போது கட்டை கரும்பு சாகுபடி நடந்து வருகிறது. கட்டை கரும்பில் நுண்ணூட்டச் சத்து குறைபாடு காரணமாக இலைகள் மஞ்சள் நிறமாக காணப்படும். இந்த குறையை போக்க ஒரு ஏக்கருக்கு 20 கிலோ நுண்ணுாட்டக் கலவையை 100 முதல் 150 கிலோ மணல் அல்லது தொழு உரத்துடன் கலந்து கரும்பு பயிரில் வேர்பகுதியில் இட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ள வயல்களில் இரும்புச்சத்து மற்றும் துத்துநாகச் சத்துக்களை இலை வழி உரமாக தெளிக்க வேண்டும். இதற்கு 2 கிலோ ஜிங்க் சல்பேட் 4 கிலோ பெரஸ் சல்பேட் 4 கிலோ யூரியா ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து 100 மில்லி ஒட்டு திரவத்துடன் சேர்த்து காலை அல்லது மாலை வேளையில் தெளிக்க வேண்டும்.
இலைவழி உரமிடுவதை 15 நாட்கள் இடைவெளியில் இரு முறை தெளிப்பதால் நுண்ணுட்டச்சத்து குறை நீங்கி இலைகள் பசுமையாக மாறும். பயிரும் நன்றாக வளர்ந்து அதிக மகசூல் கிடைக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.