ADDED : செப் 23, 2025 09:40 PM

செஞ்சி, ; செஞ்சியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் தீர்மான ஏற்பு பொதுக் கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாநில செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ஜெயராஜ் சிறப்புரையாற்றினார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேது நாதன், செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட அவைத் தலைவர் சேகர், தலைமை தீர்மான குழு உறுப்பினர் சிவா, வல்லம் ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார், பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் நெடுஞ்செழியன், மாவட்ட கவுன்சிலர்கள் அரங்க ஏழுமலை, செல்வி ராமசரவணன், பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், மற்றும் ஒன்றிய சேர்மன்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
நகர செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.