/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ இந்து முன்னணி பேரியக்கம் கருத்தரங்கம் இந்து முன்னணி பேரியக்கம் கருத்தரங்கம்
இந்து முன்னணி பேரியக்கம் கருத்தரங்கம்
இந்து முன்னணி பேரியக்கம் கருத்தரங்கம்
இந்து முன்னணி பேரியக்கம் கருத்தரங்கம்
ADDED : செப் 23, 2025 09:41 PM

விழுப்புரம், ; விழுப்புரத்தில் மாவட்ட இந்து முன்னணி பேரியக்கம் சார்பில் நிறுவனர் ராமகோபாலனின் 98வது ஜெயந்தி விழாவை யொட்டி, இந்து எழுச்சி கருத்தரங்கம் நடந்தது.
மாவட்ட தலைவர் சதீஷ்அப்பு தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சுரேஷ் துரைராஜ், பொருளாளர் விஸ்வநாதன், செயலாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தனர். கலைமணி கருத்தரங்கை துவக்கி வைத்தார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மகேஷ், செயற்குழு உறுப்பினர் பாலு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாவட்ட செயலாளர் தனபால் வரவேற்றார். செயற்குழு உறுப்பினர் ரஞ்சித் தொகுப்புரையாற்றினார். இந்து இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் தியாகு, செயற்குழு தேசிங்கு உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
காணை ஒன்றிய பொருளாளர் தட்சணாமூர்த்தி நன்றி கூறினார்.