ADDED : செப் 18, 2025 11:14 PM

திண்டிவனம்:திண்டிவனத்தில், நடந்த போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சந்தை மேடு பகுதி, அன்னை கருணாலயா சமூக நல நிறுவனம், மகாத்மாகாந்தி மது போதை மறுவாழ்வு மையம் மற்றும் திண்டிவனம் அன்னை சமுதாய கல்லுாரி இணைந்து, போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.
அன்னை கருணாலயா வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மது போதை மீட்பு மைய ஆலோசகர் அபிநயா வரவேற்றார். செவிலியர் விஜயா துவக்க உரையாற்றினார்.
மகாத்மா மறுவாழ்வு மைய திட்ட மேலாளர் ராஜ்குமார், சுகாதார ஆய்வாளர் ஸ்ரீ வர்ஷன் முன்னிலை வகித்து பேசினர்.
திண்டிவனம் மருத்துவமனை சித்த மருத்துவர் சுபாஷினி, அன்னை சமுதாயக் கல்லுாரி முதல்வர் உதயசங்கர் ஆகியோர் போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினர். நிகழ்ச்சியில் கல்லுாரி மாணவர்கள் முதியோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மது போதை மீட்பு மைய ஆலோசகர் பவித்ரா நன்றி கூறினார்.