/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ எல்லீஸ்சத்திரம் பைபாஸ் மேம்பாலம் பணி 'விறுவிறு'; எல்லீஸ்சத்திரம் பைபாஸ் மேம்பாலம் பணி விறுவிறு ஏப்ரலில் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டம் எல்லீஸ்சத்திரம் பைபாஸ் மேம்பாலம் பணி 'விறுவிறு'; எல்லீஸ்சத்திரம் பைபாஸ் மேம்பாலம் பணி விறுவிறு ஏப்ரலில் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டம்
எல்லீஸ்சத்திரம் பைபாஸ் மேம்பாலம் பணி 'விறுவிறு'; எல்லீஸ்சத்திரம் பைபாஸ் மேம்பாலம் பணி விறுவிறு ஏப்ரலில் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டம்
எல்லீஸ்சத்திரம் பைபாஸ் மேம்பாலம் பணி 'விறுவிறு'; எல்லீஸ்சத்திரம் பைபாஸ் மேம்பாலம் பணி விறுவிறு ஏப்ரலில் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டம்
எல்லீஸ்சத்திரம் பைபாஸ் மேம்பாலம் பணி 'விறுவிறு'; எல்லீஸ்சத்திரம் பைபாஸ் மேம்பாலம் பணி விறுவிறு ஏப்ரலில் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டம்
ADDED : மார் 15, 2025 10:31 PM

விழுப்புரம்; விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் பைபாஸ் மேம்பால பணிகளை முடித்து, வரும் ஏப்ரல் 18ம் தேதி பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
விழுப்புரம் புறவழிச்சாலையில் எல்லீஸ்சத்திரம் சாலை சந்திப்பில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நான்கு சாலைகள் சந்திக்கின்றன. இப்பகுதியை அதிகளவில் வாகனங்கள் கடந்து செல்வதால், அடிக்கடி விபத்து ஏற்படுவதுடன், போக்குவரத்தும் பாதிக்கிறது.
இப்பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து, எல்லீஸ்சத்திரம் சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்டுவதற்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் 23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் பணி துவங்கியது.
சென்னை - திருச்சி மார்க்கத்தில், 1 கி.மீ., துாரத்திற்கு இருபுறமும் சர்வீஸ் சாலை பணி கடந்தாண்டு துவங்கியது. சாலை சந்திக்கும் மையத்தில் தலா 28 மீட்டர் நீளம், அகலத்தில், கீழே வாகனங்கள் செல்லும் வகையில், யு.வி.பி., கான்கிரீட் பாலம் கட்டுமான பணி நடந்தது.
சென்னை மார்க்கத்தில் 300 மீட்டர் தொலைவிற்கு இணைப்பு சாலை, திருச்சி மார்க்கத்தில் 400 மீட்டர் தொலைவிற்கு இணைப்பு சாலை அமைத்து, மண் நிரப்பி சமன்படுத்தும் பணி நடந்தது.
இது குறித்து நகாய் திட்ட அதிகாரிகள் கூறுகையில், 'எல்லீஸ்சத்திரம் சந்திப்பு மேம்பால பணிகள் தற்போது துரிதமாக நடக்கிறது. ஓராண்டிற்குள் இந்த பணிகளை முடிக்க வேண்டிய நிலையில், மழை, புயலால் தாமதமானது. தற்போது 90 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது. மேம்பாலம் மேற்புரத்தில் சாலை போடும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. வரும் ஏப்ரல், 18ம் தேதி பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டு பணிகள் நடக்கிறது' என்றனர்.