ADDED : அக் 14, 2025 06:55 AM
திண்டிவனம்; திண்டிவனம் அருகே வீட்டின் கதவை திறந்து பீரோவில் இருந்த இரண்டரை சவரன் நகை திருடியது குறித்து போலீார் விசாரித்து வருகின்றனர்.
திண்டிவனம் அடுத்த அண்டப்பட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி ஜெயந்தி, 42; இவர், தனது வீட்டை பூட்டிக்கொண்டு கூலி வேலைக்கு சென்றார். மீ ண்டும் திரும்பிவந்து பார் த்தபோது வீட்டின் முன்பக்க கதவு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவை உடைத்து அதிலிருந்த இரண்டரை சவரன் நகை திருடு போனது தெரியவந்தது. புகாரின் பேரில், ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


