/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3516 கோடி கடனுதவி வழங்கல் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3516 கோடி கடனுதவி வழங்கல்
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3516 கோடி கடனுதவி வழங்கல்
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3516 கோடி கடனுதவி வழங்கல்
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3516 கோடி கடனுதவி வழங்கல்
ADDED : ஜூன் 20, 2025 02:46 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு, 3516 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு தின விழாவில், 1265 மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 918 உறுப்பினர்களுக்கு 92.13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வங்கிக் கடன் மற்றும் அரசு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
2021-22ம் ஆண்டு 11 ஆயிரத்து 848 குழுக்களுக்கு 620.31 கோடி, 2022-23ம் நிதியாண்டில் 12 ஆயிரத்து 166 குழுக்களுக்கு 778.74 கோடி, 2023-24ம் ஆண்டில் 13 ஆயிரத்து 872 குழுக்களுக்கு 1057.11 கோடி, 2024-25ம் ஆண்டு 12 ஆயிரத்து 341 குழுக்களுக்கு 1060.55 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.