Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ முதியவரை தாக்கிய உறவினர் கைது

முதியவரை தாக்கிய உறவினர் கைது

முதியவரை தாக்கிய உறவினர் கைது

முதியவரை தாக்கிய உறவினர் கைது

ADDED : செப் 25, 2025 03:37 AM


Google News
விழுப்புரம் : தகராறில் முதியவரை தாக்கிய உறவினரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அடுத்த நரையூரைச் சேர்ந்தவர் இருசப்பன், 76; இவரது தம்பி முருகையன் மகன்கள் ஏழுமலை, 28; சரவணன், 31; இவர்களுக்கிடையே பொதுவான போர்வெல் மோட்டாரில் தண்ணீர் பாய்ச்சுவதில் முன்விரோதம் உள்ளது.

நேற்று முன்தினம் ஏழுமலை, சரவணன் ஆகியோர் பீயூஸ் கேரியர் ஒயரை பிடுங்கியுள்ளனர். இதனை தட்டிக்கேட்ட இருசப்பன் மற்றும் அவரது பேரன் சுரேஷ், 35; ஆகியோரை ஏழுமலை, சரவணன் ஆகியோர் தாக்கி மிரட்டல் விடுத்தனர்.

வளவனுார் போலீசார் ஏழுமலை, சரவணன் மீது வழக்குப் பதிந்து சரவணனை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us