ADDED : செப் 25, 2025 03:37 AM

செஞ்சி : வல்லம் ஒன்றியத்தை சேர்ந்த வல்லம், மேல்சித்தாமூர், கொங்கரப்பட்டு, கீழையூர், ஆனாங்கூர் ஆகிய ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களுக்கான, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் வல்லத்தில் நடந்தது.
ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் ராமதாஸ், சிலம்பு செல்வன் முன்னிலை வகித்தனர். மஸ்தான் எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்து பேசினார். தொடர்ந்து அவர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பும், வீடு தேடி மருத்துவம் திட்டத்தில் பயனாளிகளுக்கு மருந்து தொகுப்பும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, மாவட்ட அவைத்தலைவர் சேகர், தலைமை தீர்மான குழு உறுப்பினர் சிவா, ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, துரை, இளம்வழுதி, மாவட்ட கவுன்சிலர் அன்புசெழியன், அணி அமைப்பாளர்கள் தமிழரசன், மலையரசன், கார்வண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.