/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/திண்டிவனத்தில் தாமாகவே முன் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிய வியாபாரிகள்திண்டிவனத்தில் தாமாகவே முன் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிய வியாபாரிகள்
திண்டிவனத்தில் தாமாகவே முன் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிய வியாபாரிகள்
திண்டிவனத்தில் தாமாகவே முன் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிய வியாபாரிகள்
திண்டிவனத்தில் தாமாகவே முன் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிய வியாபாரிகள்
ADDED : ஜன 28, 2024 07:19 AM

திண்டிவனம், : திண்டிவனத்தில் அனைத்து வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள், அரசு அகற்றுவதற்கு முன்னரே தாமாக முன் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டிவனம் மேம்பாலம் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் நான்கு வழிகளில் ஏற்கனவே மூன்று வழிகளில் சாலை சீரமைப்பு முடிந்துவிட்டது. இதில் மேம்பாலத்திலிருந்து செஞ்சி ரோடு செல்லும் சாலை நாளை(29 ம் தேதி) சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது.
இதற்காக பொங்கல் விழாவிற்கு முன்னர், நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணைந்து, திண்டிவனம் பழைய பஸ் நிலையத்திலிருந்து செஞ்சி ரோடு, மார்க்கெட் அமைந்துள்ள நேரு வீதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்தது. பொங்கல் சமயத்தில் ஆக்கிரமிப்புகள் எடுத்தால் வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், பொங்கல் பண்டிகை முடிந்து பிறகு ஆக்கிரமிப்புகளை அகற்றலாம் என்று அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் நெடுங்சாலைத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் வரும் 29 ம் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என நெடுஞ்சாலைத்துறை அறிவித்திருந்தது. இதையொட்டி திண்டிவனத்திலுள்ள அனைத்து வியாபாரிகளும், கடந்த இரண்டு நாட்களாக தாமாக முன் வந்து, தங்கள் கடையில் முன்பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். இது பொது மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.