ADDED : அக் 12, 2025 05:02 AM
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே நரசிங்கனுார் கிராமத்தை சேர்ந்தவர் அஜய்குமார், 28: தனியார் நிறுவன தொழிலாளி.
இவரது மனைவி சந்தியா,26: இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இவர்களது மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால், மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என, கணவரிடம் சந்தியா கூறியுள்ளார். ஆனால், அஜய்குமார் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் காலையில் அலுவலகம் சென்றவர் இரவு வீடு திரும்பினார்.
இரவு, அஜய்குமார் வீட்டிற்கு வந்ததும் சந்தியாக கேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த சந்தியா துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விக்கிரவாண்டி டி.எஸ்.பி., சரவணன் வழக்கு பதிநது, ஆர்.டி.ஓ., விசாரணைககு பரிந்துரை செய்தார்.


