ADDED : அக் 01, 2025 11:05 PM
திருவெண்ணெய்நல்லுார்: மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் மற்றும் போலீசார், அண்டராயநல்லுார் தென்பெண்ணையாறு பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அப்பகுதியில் மாட்டு வண்டியில் மணல் கடத்திய அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் செல்வம், 35; என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், மணல் கடத்தி வைத்திருந்த மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.


