/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விருதுநகரில் புதிதாக 29 அரசு பஸ்கள் இயக்கம் விருதுநகரில் புதிதாக 29 அரசு பஸ்கள் இயக்கம்
விருதுநகரில் புதிதாக 29 அரசு பஸ்கள் இயக்கம்
விருதுநகரில் புதிதாக 29 அரசு பஸ்கள் இயக்கம்
விருதுநகரில் புதிதாக 29 அரசு பஸ்கள் இயக்கம்
ADDED : ஜூலை 17, 2024 12:07 AM

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட அரசு போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக வாங்கப்பட்ட 29 அரசு பஸ்களின் சேவையை விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டில் அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சிவசங்கர், கலெக்டர் ஜெயசீலன் ஆகியோர் தலைமை வகித்து கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ., சீனிவாசன், தங்கப்பாண்டியன், ரகுராமன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், மதுரை அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆறுமுகம், விருதுநகர் மண்டல பொது மேலாளர் துரைசாமி, விருதுநகர் நகராட்சி தலைவர் மாதவன் உள்பட பலர் பங்கேற்றனர்.