ADDED : ஜூலை 17, 2024 12:07 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் 3 நாள் மகளிர் மேம்பாட்டு திறன் சுயதொழில் பயிற்சி வகுப்பு நடந்தது.
பல்கலைக்கழக வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு பட்டு வளர்ச்சி துறை இளநிலை ஆய்வாளர் சித்ரா பயிற்சிகளை துவக்கி வைத்து பேசினார். பேராசிரியை முத்துலட்சுமி பயிற்சி அளித்தார்.