/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வேளாண் வளர்ச்சி திட்டத்தில் ரூ.55.72 லட்சம் ஒதுக்கீடு வேளாண் வளர்ச்சி திட்டத்தில் ரூ.55.72 லட்சம் ஒதுக்கீடு
வேளாண் வளர்ச்சி திட்டத்தில் ரூ.55.72 லட்சம் ஒதுக்கீடு
வேளாண் வளர்ச்சி திட்டத்தில் ரூ.55.72 லட்சம் ஒதுக்கீடு
வேளாண் வளர்ச்சி திட்டத்தில் ரூ.55.72 லட்சம் ஒதுக்கீடு
ADDED : ஜூலை 17, 2024 12:07 AM
விருதுநகர் : தோட்டக்கலை துணை இயக்குனர் சுபா வாசுகி செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் இந்தாண்டு தேர்வு செய்யப்பட்ட 91 ஊராட்சிகளில் தோட்டக்கலைத்துறை மூலம் காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க எக்டேருக்கு 75 சதவீதம் மானியத்தில் ரூ.7500 மதிப்பிற்கு வீரிய ஒட்டு கய்கறி விதைகள், இடுபொருட்கள் 110 எக்டேர் பரப்பிற்கும், ஊட்டச்சத்து தன்னிறைவை மேம்படுத்த ரூ.200 மதிப்பில் மா, சப்போட்டா, கொய்யா, நெல்லி, எலுமிச்சை, சீத்தா போன்ற 5 வகையான பழச்செடிகள் அடங்கிய தொகுப்பு 18,330 எண்கள், 75 சவீத மானியத்தில் ரூ.150க்கு மீதி ரூ.50 பயனாளிகளின் பங்கு தொகையுடன் வினியோகம் செய்யப்பட உள்ளது. http://tnhorticulture.tn.gov.in இணையதளம் அல்லது உழவன் செயலியில் பதிவு செய்து பயன்பெறலாம், என்றார்.