சிவகாசி: சிவகாசி பசுமை மன்றம் ஒருங்கிணைப்பில் ஹட்சன் அக்ரோ புட்ஸ் நிறுவனத்தின் அறக்கட்டளையான ராஜா கே.எஸ்.பி., கணேசன் சேரிட்டீஸ் நிதி பங்களிப்பில் திருத்தங்கல் செங்குளம் கண்மாய் துார்வாரும் பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது.
கலெக்டர் ஜெயசீலன் துவக்கி வைத்தார். ஹட்சன் அக்ரோ போர்ட்ஸ் நிறுவனம் நிறுவனர் சந்திரமோகன், அசோகன் எம்.எல்.ஏ., கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, ஆர்.டி.ஓ., விஸ்வநாதன் முன்னிலை வகித்தனர்.
கண்மாய் துார்வாறுதல், கரை பலப்படுத்துதல், கரைகளில் அடர்வனம் வைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை பசுமை மன்றம் நிர்வாகிகள் ரவி அருணாச்சலம், செந்தில்குமார், சுரேஷ், டாக்டர் வெங்கடேஷ் செய்தனர்.