/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மனிதர்களை வெற்றி கொள்ள புத்தகங்களே கற்றுத் தரும் மனிதர்களை வெற்றி கொள்ள புத்தகங்களே கற்றுத் தரும்
மனிதர்களை வெற்றி கொள்ள புத்தகங்களே கற்றுத் தரும்
மனிதர்களை வெற்றி கொள்ள புத்தகங்களே கற்றுத் தரும்
மனிதர்களை வெற்றி கொள்ள புத்தகங்களே கற்றுத் தரும்
ADDED : ஜூன் 30, 2024 06:23 AM

ராஜபாளையம், : தன்னை அறியவும் மனிதர்களை புரியவும் உலகத்தை தெரியவும், போராடவும் வெற்றி கொள்ளவும் நல்ல புத்தகங்களே கற்றுத் தரும் என முன்னாள் போலீஸ் எஸ்.பி டாக்டர் கலியமூர்த்தி மாணவர்களிடையே பேசினார்.
ராஜபாளையம் ஸ்ரீ ரமணா அகாடமி சி.பி.எஸ்.இ பள்ளி ஆண்டு விழா நடந்தது. முதல்வர் கல்யாணி வரவேற்றார். தாளாளர் கிருஷ்ணவேணி தொடங்கி வைத்தார்.
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் பதிப்பில் டாக்டர் கு.கணேசன் எழுதிய நோய் தீர்க்கும் டயட் பிளான் புத்தகத்தை வெளியிட்டு முன்னாள் எஸ்.பி,,கலியமூர்த்தி பேசுகையில்,
பிள்ளைகளுக்கு பெற்றோர் பெரிய சிந்தனைகளை கற்றுக் கொடுக்க வேண்டும். உலகின் மிகச் சிறந்த அறிஞர்கள் கூட 25 சதவீதம் மட்டுமே செலவிடுகின்றனர் என ஆய்வு தெரிவிக்கிறது. மனிதன் தினமும் 60 ஆயிரம் எண்ணங்களை சிந்திக்கின்றான்.
விவசாய நிலத்தில் பயிர்கள் வளர எவ்வாறு களைகளை விலக்கி வைக்க வேண்டுமோ அதுபோல பெற்றோர், ஆசிரியர் பிள்ளைகளுக்கு சரியான எண்ணங்கள் குறித்து சொல்லித் தந்து ஒருமுகப்படுத்த வேண்டும். உலகை மாற்றும் ஆயுதம் கல்வி மட்டுமே. மற்றவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றுவதற்கு எல்லாவற்றையும் விட சிறந்தது கல்வியே. அலைபேசிகளுக்கு பதில் பிள்ளைகளுக்கு நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும்.
தன்னை அறியவும் மனிதர்களை புரியவும் உலகத்தை தெரியவும், போராடவும் வெற்றி கொள்ளவும் நல்ல புத்தகங்களே கற்றுத் தரும்.
அலைபேசி நன்றாக உபயோகித்தால் வரம். தவறாக மாறினால் அதுவே ஒரு சாபம். இக்கால பிள்ளைகள் நேரத்தை விரயமாக்கி தவறாக போவதற்கு காரணம் அலைபேசியே. அலைபேசி காலத்தின் கட்டாயம். எதை விடுப்பது எதை பார்ப்பது என்று தெரிந்து கொள்பவன் ஜெயிக்கிறான்.
குழந்தை வளர்ப்பது என்பது ஒரு வேள்வி. நீங்கள் சொல்வதை கேட்பதில்லை. நீங்கள் செய்வதை செய்கிறார்கள். எனவே பெற்றோர் முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
பிள்ளைகளை ஆசைக்கு வாழ்வதை விட தேவைக்கு வாழ கற்றுக் கொடுங்கள். அவமானம் இல்லாமல் வெகுமானம் இல்லை என்பதை புரிய வைக்க வேண்டும்.
கோபம் என்பது இயலாமையின் வெளிப்பாடு என்பதை உணர்ந்து இளைய சமுதாயத்தினரை நல்வழிக்கு கொண்டு செல்வது நம் கடமை, என்றார்.
பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் கலந்து கொண்டனர்.