ADDED : ஜூலை 16, 2024 04:17 AM
ராஜபாளையம் : ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
ராஜபாளையத்தில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு லேசான சாரல் பெய்தது. இதனை தொடர்ந்து நேற்று காலை முதல் மேகமூட்டம் காணப்பட்ட நிலையில் மதியம் 2 மணிக்கு மேல் தளவாய்புரம், சத்திரப்பட்டி, சமுசிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது.
மழைக்குப்பின் சாரல் தொடர்ந்து செய்து வருவதால் கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழலுக்கு மாறி உள்ளது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.