/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சேதமடைந்த பாலங்கள்; விஷப்பூச்சிகள் நடமாட்டம் விருதுநகர் வி சேதமடைந்த பாலங்கள்; விஷப்பூச்சிகள் நடமாட்டம் விருதுநகர் வி
சேதமடைந்த பாலங்கள்; விஷப்பூச்சிகள் நடமாட்டம் விருதுநகர் வி
சேதமடைந்த பாலங்கள்; விஷப்பூச்சிகள் நடமாட்டம் விருதுநகர் வி
சேதமடைந்த பாலங்கள்; விஷப்பூச்சிகள் நடமாட்டம் விருதுநகர் வி
ADDED : ஜூலை 01, 2024 05:31 AM

விருதுநகர் : மண் அரிப்பை தடுக்க அமைக்கப்பட்ட தடுப்புச் சுவர் இடிந்ததால் வீடுகளுக்குள் விஷப்பூச்சிகள் நடமாட்டம், வாறுகால், பாலங்கள் சேதம், அடிகுழாய்கள் சீரமைக்கப்படாததால் தண்ணீர் தட்டுப்பாடு என எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் விருதுநகர் வி.எம்.சி., காலனி மக்கள்.
விருதுநகர் வி.எம்.சி., காலனியில் 6 குறுக்கு தெருக்கள் உள்ளன. இங்கு அரசால் கட்டி கொடுக்கப்பட்ட பல குடியிருப்புகள் தற்போது போதிய பராமரிப்பு இன்றி இடிந்து விழும் நிலையில் உள்ளது. இப்பகுதியை சுற்றி செல்லும் கவுசிகா நதி கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு விடாமல் இருக்க தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. இந்த சுவர் போதிய பராமரிப்பு இல்லாததால் இடிந்து விழுந்தது. இவ்வழியாக விஷப்பூச்சிகள் வந்து வீடுகளுக்குள் புகுந்து விடுவதால் மக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.
வாறுகால்கள் முறையாக பராமரிக்கப்படாததால் ஆங்காங்கே சிதிலமடைந்துள்ளன. இதில் அடிக்கடி மண் நிறைந்து கொள்வதால் கழிவு நீர் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. வாறுகாலை கடந்து குறுக்குத் தெருக்களுக்கு செல்ல அமைக்கப்பட்ட அனைத்து பாலங்களும் மோசமான நிலையில் உள்ளன.
இங்கு குடிநீர் விநியோகம் பத்து நாட்களுக்கு ஒரு முறை செய்யப்படுகிறது. மேலும் புழக்கத்திற்கு உப்புத்தண்ணீர் அடிகுழாய் மூலம் கிடைத்தது. ஆனால் அவை முறையாக பராமரிக்கப்படாததால் சேதமாகிவிட்டது. நாய்த்தொல்லை அதிகம் உள்ளது.
வி.எம்.சி., காலனியில் பழுதான உப்புத்தண்ணீர் அடி குழாய்களை சீரமைக்க வேண்டும். மேலும் வாறுகால் அமைத்து பல ஆண்டுகளாவதால் சேதமாகி மண் நிறைந்து காணப்படுகிறது. இங்கு உள்ள வாறுகால்களை இடித்து விட்டு புதிய வாறுகால்கள் கட்ட வேண்டும்.
- பாலமுருகன், பழைய இரும்பு வியாபாரம்.
குறுக்குத்தெருக்களுக்கு வாறுகால்களை கடந்து செல்ல அமைக்கப்பட்ட பாலங்கள் அனைத்தும் பராமரிப்பு இன்றி சேதமாகியுள்ளது. இவை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. எனவே வாறுகால் பாலம் கட்ட வேண்டும்.
- முருகேசன், தொழிலாளி.