ADDED : ஜூலை 14, 2024 03:49 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சங்க தேர்தல், பதவியேற்பு விழா நடந்தது.
இப்பள்ளியில் நடந்த தேர்தலில் மாணவர் பிரிவு தலைவராக ஹரி கார்த்திக், மாணவிகள் பிரிவு தலைவராக வைஷ்ணவி, துணைத் தலைவர்களாக ராஜேஷ், ஸ்வேதா ஆகியோர் வெற்றி பெற்றனர். பின்னர் அவர்கள் தங்கள் அணிக்கான கொடிகளை ஏந்தி, உறுதி மொழி கூறி பதவியேற்றனர்.
விழாவில் தாளாளர் வெங்கடாசலபதி, இயக்குனர் கோபாலகிருஷ்ணன், முதல்வர் சுந்தர மகாலிங்கம், துணை முதல்வர் முகமது முகைதீன், லயன்ஸ் நிர்வாகிகள் குணசேகரன், ரஞ்சித், சாத்தப்பன், முனியாண்டி , சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.