/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அருப்புக்கோட்டையில் விழும் நிலையில் பிணவறை கட்டடம்: அச்சத்தில் மருத்துவர்கள் அருப்புக்கோட்டையில் விழும் நிலையில் பிணவறை கட்டடம்: அச்சத்தில் மருத்துவர்கள்
அருப்புக்கோட்டையில் விழும் நிலையில் பிணவறை கட்டடம்: அச்சத்தில் மருத்துவர்கள்
அருப்புக்கோட்டையில் விழும் நிலையில் பிணவறை கட்டடம்: அச்சத்தில் மருத்துவர்கள்
அருப்புக்கோட்டையில் விழும் நிலையில் பிணவறை கட்டடம்: அச்சத்தில் மருத்துவர்கள்
ADDED : ஜூலை 16, 2024 04:24 AM

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பிணவறை கட்டடம் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் மருத்துவர்கள், பணியாளர்கள் பிரேத பரிசோதனைகளை பயத்துடனே செய்ய வேண்டியுள்ளது.
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வார்டுகள்,ஆய்வகங்கள்,மருந்தகம்,படுக்கைகள்உட்பட அனைத்துவித வசதிகளும் உள்ளன. அதிகளவில் சுகப் பிரசவம் நடப்பதால் வெளி மாவட்டங்களில் இருந்தும் கர்ப்பிணிகள் வருகின்றனர். ஓராண்டிற்கு முன்புமாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இதற்கு ஏற்ப புதிய கட்டடங்கள், நவீன வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஆனால் இங்குள்ள பிணவறை கட்டடம் மட்டும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எந்தவித வசதிகளும் இல்லை. உள்ளே சென்று பிரேத பரிசோதனை செய்ய மருத்துவர்கள்,பணியாளர்கள் பயப்படுகின்றனர். கட்டடம் கட்டி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இதை இடித்துவிட்டு புதியதாக கட்ட நிதி ஒதுக்கப்பட்டும் கட்டட பணி எதுவும் நடக்கவில்லை.
பழைய கட்டடத்திலேயே பிரேத பரிசோதனை நடக்கிறது. ஒரு மாதத்தில் 20 க்கும் மேற்பட்ட பிணங்கள் அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, ரெட்டியபட்டி உட்பட பகுதிகளில் இருந்து வருகின்றன. பிணங்களை பதப்படுத்த குளிர்சாதன வசதிகளும் இல்லை.
2 மாதங்களுக்கு முன் பெய்த தொடர் கன மழையில் கட்டிடம் மேலும் சேதம் அடைந்து உள்ளது. கட்டடம் உட்பகுதியில் இடுப்பு அளவிற்கு தண்ணீர் நிறைந்து அதில் நின்று மருத்துவர்கள், பணியாளர்கள் பிரேத பரிசோதனை செய்துள்ளனர். புதிய கட்டடம் கட்டுவதில் மட்டும் அக்கறை காட்டும் மருத்துவத் துறை மாவட்ட தலைமை மருத்துவமனையின் பிணவறை கட்டடத்தை கட்டுவதில் பாராமுகம் காட்டுவது ஏனோ.மாவட்ட நிர்வாகம் உடனடியாக புதிய பிணவறை கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.