ADDED : ஜூலை 16, 2024 04:27 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே செட்டி குறிச்சியில், கல்லாதவர்களுக்கான புதிய பாரத எழுத்தறிவு திட்டம் துவங்கப்பட்டது.
அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் 42 மையங்களில் ஒரு மையத்திற்கு 20 பேர் வீதம் 840 கல்லாதவர்கள் இந்த திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட உதவி திட்ட அலுவலர் சிவசக்தி தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜ்குமார், வேலுச்சாமி, வளமைய மேற்பார்வையாளர் அருஞ்சுனை மணி, பள்ளி தலைமை ஆசிரியர் கற்பகவல்லி முன்னிலை வகித்தனர். புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் சிறப்பு பற்றி விளக்கம் பட்டது. புதிய பாரத எழுத்தறிவு திட்ட புத்தகங்கள் வழங்கப்பட்டது.