/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ரேஷனுக்காக 4 கி.மீ., அலையும் மக்கள்: ரோடு காணாத தெருக்கள் கீழ குருணை குளம் மக்களின் அவதிரேஷனுக்காக 4 கி.மீ., அலையும் மக்கள்: ரோடு காணாத தெருக்கள் கீழ குருணை குளம் மக்களின் அவதி
ரேஷனுக்காக 4 கி.மீ., அலையும் மக்கள்: ரோடு காணாத தெருக்கள் கீழ குருணை குளம் மக்களின் அவதி
ரேஷனுக்காக 4 கி.மீ., அலையும் மக்கள்: ரோடு காணாத தெருக்கள் கீழ குருணை குளம் மக்களின் அவதி
ரேஷனுக்காக 4 கி.மீ., அலையும் மக்கள்: ரோடு காணாத தெருக்கள் கீழ குருணை குளம் மக்களின் அவதி
இடியும் நிலையில் அங்கன்வாடி மையம்
தங்கவேல், தொழிலாளி: இங்குள்ள அங்கன்வாடி மையம் கட்டி பல ஆண்டுகள் ஆகி விட்டது. சுவர்கள் பெயர்ந்தும், உட்புறம் சேதமடைந்தும் உள்ளன. இங்குள்ள குழந்தைகளின் நலன் கருதி புதிய அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும். நாளுக்கு நாள் இதன் உறுதி தன்மை குறைந்து கொண்ட வருகிறது.
சேதமடைந்த கோடுகள்
முருகன், விவசாயி : கீழகுருணை குளத்தில் ஒருசில தெருக்களில் ரோடுகளே இல்லை. ரோடுகள் அமைக்கப்பட்ட 2 தெருக்களில் ஜல்ஜீவன் திட்டத்திற்காக பகிர்மான குழாய் அமைக்க தோண்டப்பட்டு அவையும் சேதம் அடைந்து விட்டது. தெருக்கள் ரோடுகள் இன்றி முட் புதர்கள் வளர்ந்தும், வாறுகால் இன்றி கழிவு நீரும் தேங்கி கிடக்கிறது. அனைத்து தெருக்களுக்கும் ரோடுகள், வாறுகால் அமைக்க ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மயானத்தில் தண்ணீர் இல்லை
வீரணன், தனியார் ஊழியர் : கீழ குருணைகுளத்தில் உள்ள ஊராட்சி மயானத்தில் தண்ணீர் வசதி இல்லை. இங்கு போர்வெல் அமைக்கப்பட்டும் அதில் தண்ணீர் வரவில்லை. இதனால் இறுதிச் சடங்குகள் செய்ய வருகின்றவர்களுக்கு தண்ணீர் வசதி இல்லாமல் சிரமமப்பட வேண்டியுள்ளது.


