ADDED : ஜூன் 15, 2025 06:46 AM
ராஜபாளையம் : ராஜபாளையம் வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் சார்பு நீதிபதி சண்முகவேல் ராஜ் தலைமையில் நீதிபதிகள் ராமநாதன், ப்ரீத்தி பிரசன்னா துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.
குழந்தை தொழிலாளர் முறையை முழுவதுமாக ஒழிப்பதற்காக அனைவரும் கடைப்பிடிக்க உறுதிமொழி எடுக்கும் வகையில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
இதற்காக அமைக்கப்பட்ட பேனரில் நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள் வழக்கறிஞர் சங்கத் தலைவர் குமார் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கையெழுத்திட்டனர். விழிப்புணர்வு குறித்த வேன் பிரச்சாரத்தை கொடி அசைத்து நீதிபதி சண்முகவேல் ராஜ் துவக்கி வைத்தார்.