ADDED : ஜூன் 05, 2025 12:45 AM
நரிக்குடி: நரிக்குடியில் அழகியமீனாள் கோயில் திருவிழா நடந்தது. பூச்சொரிதல், பக்தர்கள் விரதம் இருந்து காப்பு கட்டும் நிகழ்ச்சி தொடங்கியது.
நேற்று முன்தினம் குத்துவிளக்கு பூஜை நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்தன. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.