ADDED : ஜூன் 05, 2025 12:46 AM
காரியாபட்டி: காரியாபட்டி மாந்தோப்பில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாய் உள்ளது. மீன் குஞ்சுகள் வளர்க்க ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்து, 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீன் குஞ்சுகள் வாங்கி விடப்பட்டன.
ஒரு சில மாதங்களில் நன்கு வளர்ந்தன. இந்நிலையில் விவசாயத்திற்கு பயன்படுத்தியது போக சிறிதளவு தண்ணீர் இருந்தது. மீன் பிடி திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு, நேற்று துவக்கி வைக்கப்பட்டது. சின்ன, பெரிய வையம்பட்டி, தோணுகால், பிசிண்டி, அச்சங்குளம், துலுக்கன்குளம், தண்டியனேந்தல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 3 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். வலை, கூடைகளை கொன்டு பிடித்தனர். கெளுத்தி, கெண்டை, விரால் மீன்கள் அதிகம் சிக்கின. ஒவ்வொருவரும் தலா 5 முதல் 10 கிலோ வரை பிடித்து சென்றனர்.