/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/மருத்துவ தகுதிச்சான்று பெறுவதற்கான பரிசோதனையை டெப்போவில் நடத்துங்க; அரசு டிரைவர், கண்டக்டர் பணிக்கான தேர்வர்களுக்குமருத்துவ தகுதிச்சான்று பெறுவதற்கான பரிசோதனையை டெப்போவில் நடத்துங்க; அரசு டிரைவர், கண்டக்டர் பணிக்கான தேர்வர்களுக்கு
மருத்துவ தகுதிச்சான்று பெறுவதற்கான பரிசோதனையை டெப்போவில் நடத்துங்க; அரசு டிரைவர், கண்டக்டர் பணிக்கான தேர்வர்களுக்கு
மருத்துவ தகுதிச்சான்று பெறுவதற்கான பரிசோதனையை டெப்போவில் நடத்துங்க; அரசு டிரைவர், கண்டக்டர் பணிக்கான தேர்வர்களுக்கு
மருத்துவ தகுதிச்சான்று பெறுவதற்கான பரிசோதனையை டெப்போவில் நடத்துங்க; அரசு டிரைவர், கண்டக்டர் பணிக்கான தேர்வர்களுக்கு
ADDED : செப் 24, 2025 05:56 AM

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் 3274 டிரைவர், கண்டக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு தேர்வுகள் முடிந்து தற்போது நேர்முகத்தேர்விற்கான அழைப்பு கடிதங்கள் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
விருதுநகர் அரசு போக்குவரத்து கழகத்தில் 72 பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு அழைப்பு கடிதம் 191 பேருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இன்று முதல் துவங்கும் நேர்முகத்தேர்வில் பங்கேற்கும் நாள், நேரம், தேவையான ஆவணங்கள் ஆகிய தகவல்கள் அழைப்பு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமான ஒன்று மருத்துவ தகுதிச்சான்றிதழ்.
அரசு டிரைவர், கண்டக்டர் பணிக்கு உயரம் 165 செ.மீ., எடை குறைந்தது 50 கிலோ இருப்பதற்கான சான்றிதழ், கண், காது பரிசோதனை, ரத்தப்பரிசோதனை சான்றிதழை அரசு மருத்துவரின் கையொப்பம், முத்திரையுடன் கூடிய சான்றிழ் ஏற்றுக்கொள்ளப்படும்.
இந்த மருத்துவ தகுதிச்சான்றிதழை பெறுவதற்காக தினமும் தேர்வர்கள் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைக்கு வந்து வெளிநோயாளிகள் சீட்டு பதிவு செய்து, பரிசோதனை முடித்து சான்றிதழ் பெறுவதற்கு காத்திருக்கும் நிலை தொடர்கிறது.
இதற்காக முக்கியஸ்தர்கள் சிபாரிசுளுடன் வருபவர்களும் உள்ளனர்.ஆனால் தேர்வர்களுக்கான மருத்துவச்தகுதிச்சான்று போலீஸ், தீயணைப்புத்துறைகளில் மொத்தமாக குறிப்பிட்ட ஒரிரு நாட்கள் ஒதுக்கப்பட்டு எடுக்கப்படுகிறது. இதே போல விருதுநகர் அரசு போக்குவரத்து கழகத்தின் தேர்வர்களுக்கும் மொத்தமாக ஒரிரு நாட்கள் டெப்போவில் வைத்து மருத்துவ முகாம் நடத்தி மருத்துவதகுதிச்சான்று கொடுக்கும் நடவடிக்கையை எடுத்தால் அரசு மருத்துவமனையில் தேர்வர்கள் காத்திருப்பது தவிர்க்க முடியும்.எனவே விருதுநகர் அரசு போக்குவரத்து கழகத்தின் வளாகத்தில் குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கி அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையுடன் இணைந்து மருத்துவ முகாம் நடத்தி தேர்வர்களுக்கு உயரம், எடை, கண், காது, ரத்தப் பரிசோதனை செய்து மருத்துவதகுதிச்சான்று கொடுக்கும் நடவடிக்கையை எடுக்க வேண்டுமென தேர்வர்கள் விரும்புகின்றனர்.