/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ இணை பொருட்கள் வாங்க நிர்பந்தம் யூரியா கொள்முதல் செய்ய தயக்கம் :விவசாயிகள் அவதி இணை பொருட்கள் வாங்க நிர்பந்தம் யூரியா கொள்முதல் செய்ய தயக்கம் :விவசாயிகள் அவதி
இணை பொருட்கள் வாங்க நிர்பந்தம் யூரியா கொள்முதல் செய்ய தயக்கம் :விவசாயிகள் அவதி
இணை பொருட்கள் வாங்க நிர்பந்தம் யூரியா கொள்முதல் செய்ய தயக்கம் :விவசாயிகள் அவதி
இணை பொருட்கள் வாங்க நிர்பந்தம் யூரியா கொள்முதல் செய்ய தயக்கம் :விவசாயிகள் அவதி
ADDED : செப் 26, 2025 01:49 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: இணைப் பொருட்கள் வாங்க நிர்பந்திக்கப்படுவதால் யூரியா உரங்களை கொள்முதல் செய்ய வியாபாரிகள் தயக்கம் காட்டுவதால் விவசாயத்திற்கு தேவையான உரம் கிடைக்காமல் விருதுநகர் மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல், மக்காச்சோளம், கரும்பு, வாழை உட்பட பல பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்.
இதற்காக யூரியா உரத்துடன் டி.ஏ.பி. போன்ற உரங்களையும் விவசாயிகள் கலந்து தெளிப்பது வழக்கம். இதனால் மாவட்டத்தில் ஒவ்வொரு நகரங்களிலும் யூரியா விற்பனை அதிகளவில் நடக்கிறது.
ஆனால் தற்போது யூரியா கொள்முதலின் போது இணை பொருட்களாக பல்வேறு உரங்களின் திரவங்களையும் வாங்க வேண்டும் என உர நிறுவனங்கள் வியாபாரிகளை நிர்பந்திக்கின்றனர். ஏற்கனவே பல உரக்கடைகளில் இணைபொருட்கள் விற்பனையாகாமல் தேங்கி பல லட்சம் ரூபாய் இழப்பிற்கு உரக்கடை உரிமையாளர்கள் ஆளாகி வருகின்றனர். இதனால் அதனை கொள்முதல் செய்ய உரக்கடை உரிமையாளர்கள் தயங்குகின்றனர்.
தற்போது சம்பா பருவ நெல் சாகுபடிக்கு விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை தயார் செய்து நாற்றுகள் நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் யூரியா உரம் கிடைக்காமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இது குறித்து வத்திராயிருப்பு விவசாயி பிரகலாதன் கூறுகையில், விவசாயத்தின் பிரதான உரமான யூரியா தற்போது கிடைப்பதில்லை. ஒரு சில கடையினரும் பல்வேறு ஆவணங்களை கேட்கின்றனர். தற்போது நெல் நடவு பணி மேற்கொள்ளப்படும் நிலையில் யூரியா உரம் கிடைப்பதில்லை. யூரியா,டி.ஏ.பி. பொட்டாஷ் போன்ற உரங்கள் தடையின்றி கிடைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இணை பொருட்கள் வாங்க வேண்டும் என நிர்பந்திக்க கூடாது என்றார்.