/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சமையல் மாஸ்டரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை சமையல் மாஸ்டரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
சமையல் மாஸ்டரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
சமையல் மாஸ்டரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
சமையல் மாஸ்டரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
ADDED : செப் 26, 2025 01:49 AM
ஸ்ரீவில்லிபுத்தூர: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் போலீசில் புகார் கொடுத்தவரை கத்தியால் குத்திக் கொலை செய்த வினோத்திற்கு 30, ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார் பட்டி தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து 45, .சமையல் மாஸ்டர். இவனது மனைவி தெய்வானை. 38. வாய் பேச இயலாதவர். இவர் மில் வேலைக்கு சென்று வரும் போதொல்லாம், கொளூர்பட்டி தெருவை சேர்ந்த வினோத் கிண்டல், கேலி செய்து வந்துள்ளார். இதுகுறித்து வினோத் மீது மாரிமுத்து போலீசில் புகார் செய்தார். இதனை திரும்ப பெறக்கோரி அவரை வினோத் மிரட்டி வந்துள்ளார்.
2024 ஏப். 2 இரவு முதலியார் பட்டி தெருவில் மாரிமுத்து நடந்து வரும்போது அவரை கத்தியால் குத்தி வினோத் கொலை செய்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் அவரை கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது இதில் வினோத்திற்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ஜெயக்குமார் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் திருமலையப்பன் ஆஜரானார்.