விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக வருவாய் கிராம உதவியாளர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் கருப்பசாமி தலைமையில் நடந்தது.
இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர் வைரவன், கூட்டுறவு துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அந்தோணிராஜ், ஆதி திராவிடநலத்துறை மாவட்ட இணைச் செயலாளர் மகேந்திரன் உள்பட பல சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.