ADDED : மே 25, 2025 06:58 AM
விருதுநகர் :விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இலவச இதய சிகிச்சை மருத்துவ முகாம் மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவைகள் மையம் (டி.இ.ஐ.சி.,), சுகாதாரத்துறை சார்பில் கோவை ஜி. குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையுடன் (ஜி.கே.என்.எம்.,) இணைந்து மருத்துவமனை கண்காணிப்பாளர் அரவிந்த்பாபு தலைமையில் நடந்தது.
இதில் குழந்தைகள் நலப்பிரிவு துறைத் தலைவர் சங்கீத், டி.இ.ஐ.சி., திட்ட அலுவலர் ரோனிஷா, டாக்டர்கள் விஜயக்குமார், சஞ்சிதாஹரிணி குருசந்திரசேகர் ஆகியோர் பங்கேற்றனர்.