/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வீணாகும் குடிநீர், தேங்கும் கழிவுநீர், மோசமான ரோடு வீணாகும் குடிநீர், தேங்கும் கழிவுநீர், மோசமான ரோடு
வீணாகும் குடிநீர், தேங்கும் கழிவுநீர், மோசமான ரோடு
வீணாகும் குடிநீர், தேங்கும் கழிவுநீர், மோசமான ரோடு
வீணாகும் குடிநீர், தேங்கும் கழிவுநீர், மோசமான ரோடு

தெருவில் ஓடும் குடிநீர்
சுப்பையா, தனியார் ஊழியர்: காலனியில் சோனை கோயில் தெருக்களில் போடப்பட்ட குடிநீர் குழாயில் திருகு போடப்பட்டது. அதில் தண்ணீர் குறைந்த அளவு வந்ததால் அனைவருக்கும் தண்ணீர் கிடைக்காமல் போனது. வேறு திருகு போட வலியுறுத்தப்பட்டது. நடவடிக்கை இல்லாததால் திருகை கழட்டி வைத்து தண்ணீர் பிடித்து வருகின்றனர். பிடித்தது போக அடைக்க முடியாமல் தற்போது வீணாகி வீதியில் தேங்குகிறது. வாறுகால் வசதி இல்லாததால் வெளியேற வழி இல்லை. சிறுவர்கள் அதில் விளையாடுவதால் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. அடிப்படை வசதிகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
படுமோசமான ரோடு
திருமலை, தனியார் ஊழியர்: சக்தி மாரியம்மன்கோயிலில் இருந்து செவல்பட்டி வரை செல்லும் ரோடு படுமோசமாக இருக்கிறது. மாணவர்கள் செல்ல முடியவில்லை. வாகனங்களில் செல்பவர்கள் தட்டு தடுமாறி செல்ல வேண்டி இருக்கிறது. பல்வேறு ஊர்களுக்கு இந்த வழியாக செல்பவர்கள் சிரமப்படுவதால் ரோடு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீடுகளுக்குள் செல்லும் மழை நீர்
பழனிச்சாமி, தனியார் ஊழியர்: பெரியார் நகரில் பெரும்பாலான வீதிகள் ரோடு மட்டத்திலிருந்து 2 அடி பள்ளத்தில் உள்ளது. மழை நேரங்களில் மழை நீர் நிரம்பி வீடுகளுக்குள் செல்கிறது. முறையான வாறுகால் வசதி இல்லாததால் தண்ணீர் செல்ல வழி இல்லை. மழை நேரங்களில் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழைநீர், கழிவு நீர் எளிதில் வெளியேற வாறுகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.