ADDED : செப் 29, 2025 05:29 AM
சிவகாசி : பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு இரு வார நிகழ்ச்சியாக சிவகாசி மேற்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் மோடியின் வாழ்க்கை வரலாற்றை குறிக்கும் புகைப்பட கண்காட்சி ரத்ததான முகாம் நடந்தது.
மேற்கு ஒன்றிய தலைவர் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் கிரி ஜனகர் துவக்கி வைத்தார். மோடி சிறு வயது முதல் ஆர்எஸ்எஸ் காலப்பணிகள் அரசியல் வாழ்க்கை பற்றிய பல அரிய புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. ஓவிய போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து ரத்ததானமுகாம் நடந்தது.


