/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ரமணா பள்ளி மாணவர்கள் விஞ்ஞானியுடன் கலந்துரையாடல்ரமணா பள்ளி மாணவர்கள் விஞ்ஞானியுடன் கலந்துரையாடல்
ரமணா பள்ளி மாணவர்கள் விஞ்ஞானியுடன் கலந்துரையாடல்
ரமணா பள்ளி மாணவர்கள் விஞ்ஞானியுடன் கலந்துரையாடல்
ரமணா பள்ளி மாணவர்கள் விஞ்ஞானியுடன் கலந்துரையாடல்
ADDED : பிப் 01, 2024 07:09 AM
ராஜபாளையம் : ராஜபாளையம் ரமண வித்யாலயா, ரமணா அகாடமி சி.பி.எஸ்.இ பள்ளியில் பாபா அணு ஆராய்ச்சி மைய முன்னாள் அறிவியல் விஞ்ஞானி டேனியல் செல்லப்பா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சிக்கு பள்ளி ஆலோசிகர் டாக்டர். கு. கணேசன் தலைமை வகித்தார். விஞ்ஞானி டேனியல் செல்லப்பா மாணவர்களுடன் பேசுகையில், எதிர்கால படிப்புகளில் தொழில் வாய்ப்புகளை கண்டறிந்து, புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வேண்டும் எனில் அறிவியல் ஆர்வத்தை ஆரம்பம் முதல் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மதிப்பெண்களை தாண்டி உலகச் செய்திகளை அறிந்து கொள்வதற்கு ஆழமான வாசிப்பு முக்கியம். ஆசிரியர்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளின் மீது மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக செயல்பட வேண்டும். புதிய வகையான கற்றல் கற்பித்தல் முறை மாணவர்களுடன் அதிக புரிதலை உருவாக்கும், என்றார்.
அறிவியல் கண்காட்சியில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.
சந்தன குமாரி நன்றி கூறினார். ஏற்பாடுகளை முதல்வர்கள் சுதா, கல்யாணி நிர்வாக அலுவலர் ராமராஜ் செய்தனர்.


