/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் அறங்காவலர்கள் பதவிக்காலம் முடிவு *புதியவர்கள் நியமனம் எப்போது ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் அறங்காவலர்கள் பதவிக்காலம் முடிவு *புதியவர்கள் நியமனம் எப்போது
ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் அறங்காவலர்கள் பதவிக்காலம் முடிவு *புதியவர்கள் நியமனம் எப்போது
ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் அறங்காவலர்கள் பதவிக்காலம் முடிவு *புதியவர்கள் நியமனம் எப்போது
ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் அறங்காவலர்கள் பதவிக்காலம் முடிவு *புதியவர்கள் நியமனம் எப்போது
ADDED : செப் 26, 2025 01:47 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் அறங்காவலர் குழுவின் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து புதிய அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு மக்களிடமும், அரசியல்வாதிகளிடமும் ஏற்பட்டுள்ளது.
இக்கோயிலின் தக்காராக சிவகாசியை சேர்ந்த ரவிச்சந்திரன், 2009 முதல் 2023 வரை 14 ஆண்டுகள் செயல்பட்டு வந்த நிலையில் 2023 செப்.ல் ராம்கோ சேர்மன் வெங்கட்ராம ராஜா அறங்காவலர் குழு தலைவராகவும், ராம்குமார், வரதராஜன், உமாராணி, நளாயினி, மனோகரன் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டு செயல்பட்டனர்.
இவர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பதவிக்காலத்தை தமிழக அரசு நீட்டிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எவ்வித அறிவிப்பும் வராததால் செப். 18ல் பதவி காலம் முடிவடைந்தது.
இதற்கிடையே புதிய அறங்காவலர்களுக்கான நியமனம் குறித்த அறிவிப்பு அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்டு, அதற்கான காலக்கெடு முடிந்த நிலையில் 2 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.
இதனால் மீண்டும் அறங்காவலர் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில் அறங்காவலர் பதவியை பெற உள்ளூர் முக்கிய பிரமுகர்களும், ஆளுங்கட்சி அரசியல்வாதிகளும் எதிர்பார்க்கின்றனர். ஆனால், சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களில் உள்ள நிலையில் அறங்காவலர்களை நியமிக்க தமிழக அரசு முன்வருமா என்பது கேள்விக்குரியாக உள்ளது.