தி.மு.க., தேர்தல் பணிக்குழு மஸ்தான் பெயர் 'மிஸ்ஸிங்'
தி.மு.க., தேர்தல் பணிக்குழு மஸ்தான் பெயர் 'மிஸ்ஸிங்'
தி.மு.க., தேர்தல் பணிக்குழு மஸ்தான் பெயர் 'மிஸ்ஸிங்'
ADDED : ஜூன் 13, 2024 06:38 AM

விழுப்புரம் : விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலையொட்டி, தி.மு.க., தலைமை கழகம் மூலம் தேர்தல் பணிக்குழு நியமித்துள்ளது
துணைப் பொது செயலாளரான அமைச்சர் பொன்முடி, கொள்கை பரப்பு செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி., ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில் முதன்மை செயலாளர்களான அமைச்சர்கள் நேரு, வேலு, பன்னீர்செல்வம், சக்கரபாணி, அன்பரசன், சிவசங்கர், கணேசன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழுவினர் நாளை 14ம் தேதி விக்கிரவாண்டியில் நடக்கும் தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை நடத்தவுள்ளனர்.
இக்குழுவில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் மஸ்தான் பெயர் இடம் பெறாததும், அவர் சில தினங்களுக்கு முன் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.